இந்துக்களால் விரதமிருந்து அனுஷ்டிக்கப்படும் பூஜையில் நவாரத்திரிக்கு ஒரு இடம் உண்டு.
நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்களும் வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி துர்கை, லட்சுமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபடுவதாகும். நவராத்திரி விரதமானது பெரும்பாலும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் வரும்.
இந்தக் காலத்தில் பூமியின் வடக்கு கோளம் சூரியனை விட்டு விலகி பகலில் ஒளி குறைவாகவும், இரவில் ஒளி அதிகமாகவும் இருக்கும். அந்தவகையில், 2023ஆம் ஆண்டிற்கான நவராத்திரி விரதம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ்விரதம் கடைப்பிடிக்கும் முறை, வழிபாட்டு முறை என்பவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்த ஆண்டிற்கான நவராத்திரியானது நாளை அதாவது ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி ஒக்டோபர் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வருகிறது.
நவராத்திரியின் முதல் நாளில் கலசம் வைத்து சிலர் வழிபடுவார்கள். அந்தவகையில் நாளை காலை 11:44 முதல் மதியம் 12:30 மணி வரை கலசம் வைத்து வழிபட ஏற்ற நேரம் ஆகும்.
வழிபடும் முறை விரதம்
இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நீராடி தியானம் செய்து இந்த 9 நாட்களும் வழிபட வேண்டும். 9 நாட்களும் நல்ல நேரத்தில் சம்பிரதாயப்படி கலசம் வைத்து அந்நாளுக்கு ஏற்ற தேவியை நினைத்து மலர்கள், பழங்கள் என்பவற்றை படைத்து தேவிகளுக்குறிய மந்திரத்தை சொல்லி தினமும் வழிபட வேண்டும்.
கலசம் வைத்து வழிபடும் இடத்தில் தினமும் சுத்தமான நெய் தீபம் ஏற்றி 9 நாட்கள் மலர்களை அர்ச்சிக்கவும். இவ்வாறு வழிபட்டுவதால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
விரதத்தின் முக்கியத்துவம்
நவராத்திரி விரதம் இருந்து வழிபடுவது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஏற்படுத்தும்.
விரத வழிபாட்டின் மூலம் அன்னை வீட்டிற்கு வருவாள் எனவும் அன்னையின் வருகையால் அனைத்து தொல்லைகளும் நீங்கும்.
முறையாக விரதமிருந்து வழிபடுவதன் மூலம் உங்கள் தோஷங்களும் கிரகங்களும் அமைதிய இருக்கும்