ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பொங்க போகும் 3 ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..! இன்றைய ராசிபலன்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

இதேவேளை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய தினம் முன்னேற்றம் தரும் நாளாக அமையும். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கைக்கு வரும். தீபாவளி செலவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. வீட்டில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தபடி தீபாவளி பரிசுகளை வாங்கி கொடுப்பீர்கள். மனநிறைவும் சந்தோஷமும் நிறைந்த நாள் இது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து, தொலைபேசியில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.;நிறைவான சாப்பாடு பிடித்தபடி அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவுக்கு ஓஹோ என இருக்காது. எப்போதும் போலத்தான் செல்லும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். மனைவி சொல்படி கேட்டால் தவறு கிடையாது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் இழுத்துக் கொண்டே செல்லும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையினால் உடல் அசதி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். உடல் சோர்வு இருக்கும். தூக்கம் தூக்கமாக வரும். ஞாயிற்றுக்கிழமை நிம்மதியாக ஓய்வு எடுத்து இந்த நாளை கழித்து விடுவீர்கள். மாமனார் வழி உறவால் சின்ன பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் கவனம் தேவை. கவனக்குறைவு காரணமாக சின்ன சின்ன இடையூறுகள் வரும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர் கையில் ஒப்படைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கட்டுமான தொழில் செய்பவர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். யாரிடமும் கடன் வாங்க வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குதூகலமான நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மை நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திப்பீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர கூட வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. இன்றைய தினம் குடும்பத்தோடு மாலை நேரத்தில் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. சிலபேர் தீபாவளி பரீட்சை கூட முடித்து விடுவார்கள். தாய்மாமன் வழி உறவால் லாபம் கிட்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். நல்லது என்று நீங்கள் நினைத்து பேசக்கூடிய வார்த்தைகள் கூட அடுத்தவர்களுக்கு தவறாக தெரியும். கூடுமானவரை அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் சின்ன சின்ன பிக்கள் பிடுங்கள் இருக்கும். அடுத்தவர்கள் சொல்வதை நம்பி எந்த முடிவும் எடுக்காதீங்க. வருமானத்தில் பிரச்சனை இருக்காது. வாரா கடன் வசூலாக நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். பெண் பிள்ளைகளின் மூலம் மனது மகிழ்ச்சி அடையும். வாழ்க்கை துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலத்துக்கு தேவையான முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய வேலை வரிசை கட்டி நிற்கும். ஆனால் நீங்க சோம்பேறித்தனத்தோடு இருப்பீங்க. கொஞ்சம் உற்சாகத்தை வரவைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டால் தான் திங்கட்கிழமை நிம்மதியாக நாளை கடத்தலாம். ஞாபகம் வச்சுக்கோங்க சோம்பேறித்தனத்தை தூக்கி போட்டுடுங்க.