பொதுவாகவே ஒருவரின் ராசியை வைத்து அவர்களின் மொத்த ஜாகத்தையும் கணித்து விடுவார்கள். அப்படி கணிக்கையில் ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு விருப்பங்களையும், அணுகுமுறைகளையும் கொண்டிருப்பார்கள்.
அந்தவகையில், ஒரு சில ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் பழகுவது டேட்டிங் செல்வது அல்லது காதலிப்பது போன்ற பழக்கங்களை உற்சாகமாக எடுத்துக் கொண்டு செய்வார்கள். அப்படி இரட்டை டேட்டிங்கை விரும்புவர்கள் யார் யார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பொதுவாகவே நேசமாகவும் வெளிப்பயடையான இயல்பையும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு சிலவிடயங்களை ஆராய்ந்து பார்ப்பதில் அதிகம் ஆர்வம் உள்ளதால் ஒரே இரண்டு பேருடன் பழக விரும்புவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் வசிகரமானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு காதல் மற்றும் டேட்டிங் பரவசத்தை கொடுப்பதால் அவற்றை விரும்புகிறார்கள். அது மட்டுமில்லாது இவர்கள் அடிக்கடி உற்சாகமான பயணத்தை விரும்புபவராகவும் இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் உறவுகளிடம் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் மதிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன் மற்ற துணையுடன் நல்ல தருணங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இயற்கையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள். அதிலும் சாகசங்களை அதிகம் விரும்புபவர்கள். புதிய செயல்பாடுகள் மற்றும் அனுபவங்களை சேர்த்து வைத்துக் கொள்வார்கள். அதனால் இந்த இரட்டை டேட்டிங் மிகவும் பிடிக்குமாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பொதுவாகவே ராசிக்கிரகத்தின் கிளர்ச்சியாளராக இருப்பார்கள். வாழ்க்கை மற்றும் காதலுக்கு தனித்துவமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். இரட்டை டேட்டிங் அவர்களின் விதிமுறைகள் இல்லாத இயல்புடன் ஒத்துப்போகிறது.