ஒருவரது பிறப்பின்போது அமையும் கிரகங்களை பொறுத்து, அவரவரின் எதிர்கால வாழ்க்கையில் அமையப்போகும் திருமணம், பொருளாதார நிலை, கல்வி போன்ற எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசியினருக்கும் ராசிபலன் கணிக்கப்படுகிறது. அதன் மூலம் அவரவருக்கு விதிக்கப்பட்டுள்ள கிரக நிலையைப் பொறுத்து அதற்கு ஏற்றவாறு நமது செயல்களைத் திட்டமிட்டுச் செய்தால் அன்றைய நாளில் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த கணிப்பின்படி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு தைரியத்தோடு இருப்பீங்க. யார் எதை சொன்னாலும் பதிலுக்கு எதிர்த்து பேசுவீங்க. எதிரிகளை ஓட ஓட விரட்டும் அளவுக்கு துணிச்சலோடு செயல்படுவீர்கள். எப்படித்தான் இந்த தைரியம் எனக்குள் வந்தது என்று இந்த நாள் இறுதியில் யோசிப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த நாள் நிறைய ஆச்சரியத்தை உங்களுக்கு தரப் போகிறது. என்ஜாய் பண்ணுங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான நாளாக இருக்கும். எந்த பிரச்சனையும் இருக்காது. வேலை செய்யும் இடம் வியாபாரம் தொழில் என்று எல்லாம் சுமூகமாக செல்லும். கணவன் மனைவிக்குள் மட்டும் கொஞ்சம் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. உசாரா இருந்துக்கோங்க. மனைவி சொல்வதைக் கேட்டு கணவர் தலையாட்டிக்கொண்டால் பிரச்சனை இல்லை. இது பொதுப்படையாக எல்லோருக்கும் சொல்லப்படக்கூடிய கருத்து.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பு நிறைந்த நாளாக இருக்கும். குழந்தைகளுக்கு சில நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். மனது ரொம்ப ரிலாக்ஸா இருக்கும்படி நல்ல சம்பவங்கள் நடக்கும். காதல் கை கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். பெண்கள் வீட்டை சுத்தம் செய்து பராமரிக்க கூடிய பணியில் அதிக கவனம் செலுத்துவார்கள். குழந்தைக்கு பிடித்த விஷயங்களை பார்த்து பார்த்து செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக நண்பர்கள் கூட எதிரியாக மாற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் நண்பர்களை எதிரியாக மாற்றும் படி ஒரு செயலை நீங்க செய்யாதீங்க. விட்டுக் கொடுத்துடுங்க அதுதான் நல்லது. சில விஷயங்களை இன்று சிந்தித்து செயலாற்றினால் நன்மை கிடைக்கும். அவசரப்பட்டு முடிவெடுத்தால் உங்களுக்கே ஆப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கணும். முன்பின் தெரியாதவர்களை நம்பி முதலீடு செய்யாதீங்க. அவர்களுடைய ஆலோசனையை கூட அப்படியே கண்மூடித்தனமாக நம்புவது கெடுதல் தரும். தண்ணீரை குறைவாக செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணமும் சிக்கனமாக செலவாகும். மனைவி சொல்பேச்சு கேட்டு நடந்தால் நன்மை நடக்கும். நீண்ட நாள் நடக்காத ஒரு நல்ல விஷயம் இன்று மாலை நடக்க வாய்ப்புகள் உள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. யாரிடமும் கடினமான வார்த்தைகளை பேசாதீங்க. எதிரில் நிற்பவர் என்ன சொல்கிறார்கள் என்பதை முழுமையாக கேட்டுவிட்டு பிறகு பதில் பேசுங்கள். முந்திரிக்கொட்டைத்தனமா ஏதாவது நீங்க செய்ய போயி அது கடைசியில் விரிசலை உண்டு பண்ணிவிடும் ஜாக்கிரதை. மேலதிகாரிகளிடம் பேசும் போதும் கூடுதல் கவனம் இருக்கணும் ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உரிய நேரத்தில் தகுந்த உதவி கிடைக்கும். ரொம்ப கஷ்டப்படக்கூடிய சூழ்நிலையில் உங்களை உறவினர்கள் கைவிட மாட்டார்கள். நண்பர்களுடைய முக்கியத்துவம், உறவினர்களுடைய முக்கியத்துவம் என்ன என்பதை உணர்வீர்கள். யாரையெல்லாம் நீங்க உதாசீனப்படுத்தினீங்களோ, அவங்க எல்லாம் உங்களுக்கு நல்லது செய்ய வரும் போது தான் அவர்களுடைய நல்ல மனது உங்களுக்கு புரியும் அல்லவா. அப்படிப்பட்ட சில அனுபவங்கள் இன்று நடக்க வாய்ப்புகள் உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப அழகான நாட்களாக செல்ல போகுது. மனசுக்கு பிடிச்ச நபரை சந்திப்பீங்க. புதுசா சந்திக்கும் அந்த நபர் உங்களை கவரும்படி பேசுவாங்க. சில பேர் காதல் வயப்படவும் வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணை கிடைக்கலாம். ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வியாபாரத்தில் உங்கள் கீழ் பணிபுரிபவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து நடந்து கொண்டால் நன்மை நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று போராட வேண்டிய நாளாக இருக்கும். நீங்க என்ன சொன்னாலும் அதை உங்க அம்மா அப்பா ஏத்துக்க மாட்டாங்க. உங்க பொண்டாட்டி ஏத்துக்க மாட்டாங்க. எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் அடுத்தவர்களுடைய அனுமதி உங்களுக்கு கிடைக்காது. கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை தான். இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருப்பதே நல்லது. நேரமும் காலமும் கூடி வரும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம். இன்று நீங்கள் பொறுமையாக இருக்கணும் அவ்வளவுதான்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சியான நாளாகவே இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சில கஷ்டங்கள் வரும். சின்ன சின்ன பண இழப்புகள் ஏற்படும். சூதாட்டம் செய்யக்கூடாது. அடுத்தவர்களை நம்பக்கூடாது. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்கள் கொஞ்சம் கவனக் குறைபாடுடன் இருந்தாலும் உங்களை ஏமாற்றி விடுவார்கள் பார்த்துக்கோங்க. அரசாங்கத்துக்கு புறம்பாக எந்த வேலையும் செய்யாதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். மனதுக்கு பிடித்தவங்க பேசாம இருப்பாங்க. அது மனைவி மகன் யாராக வேண்டும் என்றாலும் இருக்கலாம். உங்களை கஷ்டப்படுத்தக் கூடிய வார்த்தைகளில் பேசி விடுவார்கள். மனம் நொந்து போன சூழ்நிலையில் மருந்து போட யாராவது இருக்க மாட்டார்களா என்று தேடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பிரஷர் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். கலெக்ஷனில் பின்னடைவு இருக்கும். இப்படி சின்ன சின்ன சிக்கல்களை இந்த நாளில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவும்.