துளசி செடிக்கு பக்கத்தில் இந்த பொருட்கள் வைத்தால் ஆபத்து! வாஸ்துவில் இதெல்லாம் இருக்கா?

பொதுவாக இந்து மத கலாச்சாரத்தில் துளசி செடி மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது.

இந்த செடியை வீட்டின் முற்றத்தில் வைப்பதால் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் துளசியை வழிபடுவதால் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை மகிழ்விக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.

இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

இது ஒரு புறம் இருந்தாலும் சாஸ்திரங்களில் ஏதாவது பிழை ஏற்பட்டால் அதுவும் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

புனிதம் நிறைந்த துளசி செடிக்கு அருகில் வைக்கக்கூடாத சில பொருட்களை வைக்கக்கூடாது. இது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

சம்பிரதாயங்கள்
1. காலணிகளை எந்த விதமான காரணங்களை கொண்டும் துளசிக்கு பக்கத்தில் வைக்கக்கூடாது. அது புதியதாக இருந்தாலும் பரவாயில்லை தூரமாக இருக்கட்டும். இது வீட்டிற்கு தத்திரியத்தை ஏற்படுத்தும்.

2. துளசி பானைக்குள் சிவலிங்கத்தை வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதற்கு புராணங்களின் பல விளக்கங்கள் இருக்கின்றன. இருந்தாலும் காலங்காலமாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றார்கள்.

3. முட்செடிகளை வீட்டில் வைப்பது தவறு. இது சண்டை ஏற்படுத்தி அதனை போலவே பிரித்து வைத்து விடும். இதனை துளசி பக்கத்தில் மறந்தும் வைக்காதீர்கள். இதனால் ஏற்றத்தாழ்வு எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றன.

4. விஷ்ணுவிற்கு படைக்கும் துளசியின் பக்கத்தில் துடைப்பம் வைக்கக் கூடாது. இது அசுத்தத்தை குறிக்கின்றது. இதனால் வீடுகளில் நிதிச் சிக்கல்கள் மற்றும் கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

5. புனிதத்தின் அடையாளமாக துளசி செடி பார்க்கப்படுகின்றது. இதனால் துளசிச் செடியை சுத்தமான இடங்களில் வைத்து வளர்ப்பது நல்லது. குப்பைதொட்டிற்கு பக்கத்தில் இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். இதனால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும்.