மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கை மின்சார சபை வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, போட்டியை மேம்படுத்துவதுடன் மின்சாரத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பையும் அனுமதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி முகவர் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களின் ஆற்றல் மற்றும் சட்ட நிபுணர்களின் உதவியுடன் கடந்த 10 மாதங்களில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு கடந்த வாரம் சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
அமைச்சரவை இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியதும், அது வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.