மண்ணில் சாதாரணமாக விளையக்கூடிய சில உணவுப்பொருட்களை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.
அதன்படி, மரவள்ளிக்கிழங்கு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, தக்காளி, பப்பாளி, முலாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பொதுவாக விளையும் உணவுப்பொருட்களையே இலங்கை இறக்குமதி செய்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே நேற்று (20) தெரிவித்தார்.
இறக்குமதி செய்வது
கடந்த ஆண்டும் இவ்வாறு விளையக்கூடிய உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 295 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக எதிர்பார்த்திருக்கும் வேளையிலே இவ்வாறு உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வது அவசியமற்றது என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக மண்ணில் விளையக்கூடிய பொருட்களை வளர்க்காமல் இறக்குமதி செய்யும் பொருளாதாரத்தை உருவாக்குவது அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
பூமியில் எளிதில் விளையும் பயிர்களை வளர்க்காமல் நிலத்தடியில் உள்ள கனிமங்களைப் பற்றி பேசுவது அபத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.