கொழும்பில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், 50 MOH பிரிவுகளை சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இம் மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 68,884 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக 15,953 பேர் கொழும்பில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கம்பஹாவில் 14,912 டெங்கு நோயாளர்கள், களுத்துறையில் 4,672 டெங்கு நோயாளர்கள், கண்டியில் 7,482 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.