வட சீனாவில் கண்டறியப்பட்ட புதிய நிமோனியா வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்றானது வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளிடையே அதிகமாக பதிவாகியுள்ள நிலையில், அங்குள்ள வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதன்படி, கனடா, இத்தாலி மற்றும் ருமேனியாவில் இருந்தும் அந்த வைரஸ் தொற்றுக்கான அறிகுரிகளுடன் சிலர் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விமான நிலைய சோதனை
இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான விமான நிலைய சோதனைகளை கடுமையாக்க தைவான் சமீபத்தில் முடிவு செய்திருந்தது.
தைவான் அரசின் இந்த முடிவால் கடந்த நவம்பர் மாதம் முதல் 30 சீனப் பயணிகளுக்கு நிமோனியா நோய் இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.