கிளிநொச்சி பெரும்போக நெற்செய்கையில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 28,400 ஏக்கர் நிலப் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நோய் தாக்கங் கள் அதிக அளவில் உணரப்பட்டிருப்பதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஜெகதீஸ்வரி சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்தந்த பகுதி விவசாய போதனாசிரியர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றவாறு உரிய நாசினிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக பயிர்ச்செய்கை கல்மடு குலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயிகள் பல பகுதிகளில் மடிச்சு கட்டி மற்றும் கபில நிற தத்தி நோய் தாக்கம் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சடுதியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

நோய் தாக்கத்திற்கு பல தடவைகள் கிருமி நாசினிகள் விசிறப்பட்டிருந்த போதிலும் எந்தவித பயனும் அற்ற நிலையில் பயிர்கள் வளர்ச்சி இன்றி அதே நிலையிலேயே நோயத்தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கிருமிநாசினிகள் கொள்வனவு செய்தும் உதிய பயனை பெற முடியாத நிலையில் விவசாயிகள் மிகவும் பதிக்கப்பட்டுவதாகவும் விவசாய செய்கையில் தற்பொழுது வெறுப்பும் சலிப்புத் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் ஏனெனில் ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் பல்வேறு வகையான நோய்த்தாக்கம் காரணமாகவும் இயற்கை அழிவுகளையும் விவசாயிகளே பாதிக்கப்படுகின்றனர்.

அறுவடை செய்த நெல்லினைக்கூட விவசாயிகளுக்கேற்ற விலையில் விற்பனை செய்ய முடியாது திண்டாடுவதாகவும் உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையிலும் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகளுக்கான உரியதீர்வு உதிய நேரத்தில் எந்த ஒரு பகுதியிலும் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.