நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியில் தனது ஓவியத்தை சேர்ப்பதற்கு இலங்கை சிறுவன் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அனுராதபுரம் – திரப்பன பிரதேசத்தை சேர்ந்த தஹாம் லோசித பிரேமரத்ன என்ற சிறுவன் தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு சிறிய கலைஞராகியுள்ளார்.
திரப்பன மஹாநாம ஆரம்ப பாடசாலையில் 02 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் பலரது பாராட்டுக்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
சர்வதேச போட்டி
ஓவியம் வரைவதில் உள்ளார்ந்த திறமை கொண்ட தஹாம் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தனது படைப்புகளை சமர்ப்பித்துள்ளார்.
இந்த நேரத்தில் தஹாமிற்கு நாசா ஏற்பாடு செய்த கலைப் போட்டி பற்றிய தகவல் கிடைக்கிறது.
அதற்கமைய, விண்வெளியில் வாழ்வதும் வேலை செய்வதும் என்ற கருப்பொருளில் தஹாம் வரைந்த ஓவியம் உலகின் பல நாடுகளின் சிறிய ஓவியங்களைத் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றது.
அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான நாசாவின் ஜூலை மாதத்திற்கான நாசாவின் நாட்காட்டியில் தஹாமின் படம் சேர்க்கப்பட்டுள்ளது.