இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
21ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான மக்கள் நவீன உலக வழக்கத்தில் வாழ்ந்தாலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள் தங்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை மாறாமல் கடைபிடிக்கின்றனர்.
பொதுவாக நமது சமூகத்தில் காதலையே முழுமையாக ஏற்கும் பக்குவம் இல்லை. அப்படி இருக்க இந்த பழங்குடி மக்களோ, இளம் வயதினர் திருமணம் செய்யமலே பாலியல் உறவில் ஈடுபட அனுமதிக்கும் பழக்கத்தை ஒரு சடங்காகவே பின்பற்றுகின்றனர்.
இந்த பழங்குடி மக்கள் Ghotul என்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.
இந்த பழங்குடியின மக்கள் மூங்கிலால் ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்குகிறார்கள், இதை நகரங்களில் உள்ள இரவு விடுதிகளுடன் ஒப்பிடலாம்.
இந்த மூங்கில் குடில் வீட்டில் தான் தங்கள் பாலியல் தேவை விருப்பத்தை அறிந்து கொள்ள அவர்களின் மூத்தோர் அனுமதிக்கிறார்கள்.
திருவிழா நாளில் 10 வயதை தாண்டிய திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்றுகூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர்.
பின்னர் இரவு வந்ததும் பெரியவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற, திருமணமாகாத இளைஞர்கள் அந்த மூங்கில் குடில் வீட்டிற்குள் நுழைந்து விருப்பமானவர்களுடன் உடலுறவு கொள்கின்றனர்.
இரவை ஒன்றாக கழிக்கும் இளம் வயதினர் தேவைப்பட்டால் அவர்களின் கூட்டாளர்களை மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு ஏழு நாட்கள் தொடரும் திருவிழா நிகழ்வு இறுதிக்குள் ஜோடியை இவர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
ஆடிப்பாடி மகிழ்ந்து தங்கள் இணைக்கு இயற்கையாக உருவாக்கிய பரிசுகளை இவர்கள் வழங்கி இணையை தேர்வு செய்கின்றனர்.
உள்ளம் கவர்ந்த இணையை சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பத்துடன் தலையில் பூ வைத்து தனது திருமண விருப்பத்தை அறிவிக்கிறார். இவ்வாறே இவர்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்கின்றனர்.