பொதுவாக எண் கணிதத்தின் படி, ‘S’ என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது.
இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர்.
மேலும், இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர்.இவர்கள் மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது.
வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர்.‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர்.
இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.
இது போன்று ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
1. அதிபுத்திசாலியாக இருப்பார்கள். எப்போதும் இவர்களை சுற்றி கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். எஸ் எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்கள் மேல் பதவிகளில் தான் இருப்பார்கள். ஆனால் அந்த பதவியை தவறாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
2. இயற்கையாக இவர்களிடம் உதவி செய்யும் குணம் இருக்கும். என்ன உயரத்தில் இருந்தாலும் கஸ்டத்தில் இருப்பவர்களுக்கு இறங்கி வந்து உதவி செய்வார்கள்.
3. எஸ் எழுத்தில் பெயர் கொண்டவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களிடம் பணம் காசு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கு உதவிக்காக கொடுப்பார்கள்.
4. எந்தவொரு நிலைமையிலும் இவர்களுக்கு பொறாமை குணம் வராது. மற்றவர்களின் வளர்ச்சிக்கு இவர்கள் காரணமாக இருப்பார்களே தவிற மற்றவர்கள் தூற்ற மாட்டார்கள்.
5.மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது இவர்கள் நல்ல உடலமைப்பும், மன அமைப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். வெளியிடங்களில் தனித்துவமாக இருப்பார்கள்.