கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்கையே மோசமாக மாறிவிடும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் பெப்ரவரி 11 முதல் மார்ச் 18 வரை சனி கும்ப ராசியில் அஸ்தமிக்கப் போகின்றது. சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் 37 நாட்களுக்கு அஸ்தமிக்கப் போவதால் எந்ததெந்த ராசியினருக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
சனியின் உதயத்தால் கன்னி ராசியினருக்கு நேரடியான தாக்கம் இருக்கும். இதனால் உடல் நலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.
நெருக்கமானவர்களுடன் சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. அதனால் பேசும் போதும் முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
கும்பம்
சனிபகவானின் சொந்த வீடான கும்ப ராசியில் சனி அமர்வதால் சில எதிர்மறை விளைவுகள் நேரடியாக கும்பராசியினரை தாக்கும். மற்றவர்களுடன் பேசும் போது சற்று கவனமான இருப்பது நல்லது.
வாகன சாரதிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் கூரிய ஆயுதங்களில் வேலை செய்யும் போது மிகவும் அவதானம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சனியின் உக்கிர பார்வையில் சிக்கவிருப்பதால், மிகவும் அவதாகமாக இருக்க வேண்டும்.
தொழிலதிபர்கள் புதிய விடயத்தில் பணத்தை முதலீடு செய்தால் இந்த காலகட்டத்தில் பாரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இந்த காலப்பகுதியில் தவிர்ப்பது நல்லது.