பொதுவாகவே அனைத்து மதங்களும் இறப்புக்கு பின்னர் சொர்க்கம் மற்றும் நரகம் இருப்பதாகவும் இந்தவுலகில் செய்யும் பாவங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் வழியுறுத்துகின்றன.
அந்த வகையில் இந்து சாஸ்திரத்தில் கருட புராணத்தில் இறப்பு பற்றியும் இறப்பின் அறிகுறிகள் பற்றியும் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்தும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொரும்பாலானவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இறப்பதற்கு முன் எமராஜா நமக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். இந்த அறிகுறிகள் தோன்றினால், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று கருட புராணத்தில் குறிப்பிடப்படுகின்றது.
கருட புராணத்தின் அடிப்படையில் மரணம் நிகழ்வதற்கு முன்னர் எமதர்ம ராஜா ஒரு நபருக்கு பல அறிகுறிகளைக் கொடுக்கிறார். கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மரணம் நெருங்குவதை காட்டும் அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
கருட புராணத்தின் எச்சரிக்கை
அறிகுறிகள் ஒருவருடைய நிழல் தண்ணீரிலோ, எண்ணெயிலோ, கண்ணாடியிலோ தோன்றாவிட்டாலோ அல்லது ஒருவரின் நிழல் சிதைந்து காணப்பட்டாலோ, உடலை விட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கின்றது.
ஒருவன் இறக்கும் நாட்கள் நெருங்கும் போது அவரின் பார்வை மங்கத் தொடங்குகிறது. தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களைக் கூட பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
ஆனால், தன் வாழ்நாளில் நல்ல செயல்களையோ அல்லது கர்மங்களையோ செய்தவர், இறக்கும் போது மகிமையான ஒளியைக் பார்ப்பார் எனவும் கருட புராணத்தில் குறிப்பிடப்படுகின்றது.
மரண நேரம் நெருங்கும்போது, எமனின் இரண்டு தூதர்கள் இறக்கப்போகும் நபரின் முன் நிற்பதாகவும் கருடபுராணம் கூறுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் தீய செயல்களைச் செய்தவர்கள் அதை பார்த்து அஞ்சுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர் உடலை விட்டு வெளியேறும் கடைசி நேரத்தில், அந்த நபரின் குரலும் மங்க ஆரம்பிக்கும். யாரோ திணறுவது போல் குரல் கரகரப்பாக மாறும்.
கருட புராணத்தின் படி, இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் முன்னோர்கள் கனவில் தோன்றுவார்கள். முன்னோர்கள் கனவில் அழுது கொண்டிருந்தால் அல்லது சோகமாக இருந்தால், உங்கள் மரணம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துவதாக கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.