8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள்.
இவர்களுக்கு 8,17,26,5,14,23 போன்ற நாட்களே அதிஸ்டமான நாட்கள் ஆகும். இவர்களுக்கு உரித்தான நிறம் நீலம்.
இவர்களின் பொதுவான குணம்,
- இவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.
- நியாய, அநியாயத்தை யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துரைப்பார்கள்.
- நன்கு ஆராயும் மனதை உடையவர்கள்.
- எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்வார்கள்.
- இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள்.
இதனை திகதி ஒழுங்கிலும் பார்க்கலாம்,
இவர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவார்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். நல்ல சிந்தனையாளர்கள்.
அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள். சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள்.
17-ஆம் தேதி பிறந்தவர்கள்
இவர்கள் சோதனைகளை சந்திப்பார்கள். சலிக்காமல் உழைக்கும் உழைப்பாளிகள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை கொண்டவர்கள் .
ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு.
26-ஆம் தேதி பிறந்தவர்கள்
பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். பண விரயங்களும் அதிகம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள்.
எப்படியும் உயர்ந்த பதவி, தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள். இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும்.