வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் திசைகளுடன், மரங்கள் மற்றும் செடிகளின் முக்கியத்துவமும் கூறப்பட்டுள்ளது.
வாஸ்துவில், நிதித் தடைகளை நீக்க சில சிறப்பு வகையான மலர் செடிகளை நடலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் நிதி நெருக்கடி விலகும்.
அந்தவகையில், அம்மன் லட்சுமிக்கும் செம்பருத்தி பூ மிகவும் பிடிக்கும். இதை வீட்டில் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கை.
செம்பருத்தி செடியை நடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நீங்கள் நிதி நெருக்கடியால் சிரமப்படுகிறீர்கள் என்றால், செம்பருத்தி பூ செடியை வீட்டில் நட்டு வையுங்கள். இவ்வாறு செய்தால் மகா லட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
முக்கியமாக சிவப்பு செம்பருத்தி மலர்தான் நிதி பிரச்சனைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமையன்று, வீட்டிற்கு அருகிலுள்ள மகா லட்சுமி கோவிலுக்குச் சென்று, சிவப்பு செம்பருத்திப் பூவை அர்ச்சனை செய்வதால் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிவப்பு செம்பருத்தி கொண்டு தினமும் சூரியனை வழிபட்டால் சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.
செம்பருத்திப் பூவை தண்ணீருடன் சூரியனுக்கு வைத்து பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
இந்த செடியை நடுவதன் மூலம், வீட்டில் தந்தையுடனான உறவு எப்போதும் நன்றாக இருக்கும்.
உங்கள் ஜாதகத்தில் சூரிய தோஷம் இருந்தால் வீட்டின் கிழக்கு திசையில் செம்பருத்தி செடியை நட்டால் தோஷம் நீங்கி விடும்.
செம்பருத்தி செடியில் இருந்து வரும் காற்று வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. மேலும் செம்பருத்தி செடி மாங்கல்யம் தோஷத்தை நீக்கவும் பயன்படுகிறது.
திருமணம் போன்றவற்றில் தாமதம் ஏற்பட்டாலோ, வீட்டில் செம்பருத்தி பூவை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.