தை அமாவாசையில் அதிர்ஷ்டம் பெறவுள்ள இராசிக்காரர்கள்! விரத படையலில் கட்டாயம் இடம்பெறவேண்டிய உணவுகள் என்னென்ன? மறக்காம இதை செய்யுங்க!

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம், முன்னோர் வழிபாடு செய்ய மகத்துவமான நாள். அதிலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மிகவும் விசேஷமானது.

தை அமாவாசை இன்றைய தினம் (09.02.2024) கடைப்பிடிக்க உள்ள நிலையில் முன்னோர்கள் வழிபாடு செய்வது நன்மை தரும்.

இந்த அற்புத நாளில் 6 ராசியினருக்கு நற்பலன்கள் அதிகம் கிடைக்கும்.

மேஷ ராசி
மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு பெற்றோருடனான உறவில் சுமூகமாக, அன்பு அதிகரிக்கும்.

உங்களின் எந்த ஒரு திட்டமிட்ட செயலும், முக்கிய வேலைகளும் நிறைவேறும். அரசு மூலம் நீங்கள் பலனடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி, வருமான உயர்வு கிடைக்கும்.

வேலை செய்யக்கூடியவர்களுக்கு மேலதிகாரிகளுடனான உறவு மேம்படும்.

ரிஷப ராசி
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு pஉனித யாத்திரை, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் செய்யக்கூடிய நபர்களுக்கு அதில் புதிய வாய்ப்புகளும், அதில் நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

வெளியூர், வெளிநாடு வாய்ப்புகளும், அங்கிருந்து நல்ல செய்திகளும் தேடி வர வாய்ப்புள்ளது. நிதி நிலை தொடர்பான முன்னேற்றத்தை அடைவீர்கள்.

முன்னோர் வழிபாடு, பெற்றோர் ஆசி பெறுவது நன்மை தரும்.

கடகம்
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றம் பெறலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு அதில் லாபமும் , முதலீடுகள் மூலம் உயர்வை அடைந்திடலாம்.

சிலருக்கு ஆடை, அணிகலன் வாங்கும் யோகம் தேடி வரும்.

குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிகம் தை அமாவாசை அற்புத தினத்தில் விருச்சிக ராசியினருக்கு குடும்ப மகிழ்ச்சியும், உங்கள் வேலையிலும் நல்ல முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும்.

உங்கள் முயற்சிகளில் வெற்றியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும். உங்களுக்கு நிதி நன்மைகள் அதிகரிக்கும்.

உங்களின் பயணங்கள் சிறக்கும். மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான அனுபவங்களை பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியில் அமாவாசை உருவாகிறது. உங்கள் ராசிக்கு தொழில், வேலை ரீதியான விஷயங்களின் மிக சிறப்பான பலன்களை பெற்றிடலாம்.

பணியிடத்தில் உங்களின் வேலைகள் சிறக்கும், மரியாதை அதிகரிக்கும்.

வண்டி, வாகனம், வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது.

வண்டி, வாகனத்தை இயக்கும் போது கூடுதல் கவனம் தேவை.

மீனம்
மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் திருமண சுப செய்தி தேடிவரும்.

தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், லாபமும் தேடி வரும்.

உங்களின் நிதி நிலை முன்னேற்றம் அடையும் என்பதால், நிதி சிக்கல்கள் தீரும்.

வருமானம் அதிகரிப்பதும், முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

சமூகத்தில் உங்களுக்கென மதிப்பு, மரியாதை உண்டாகும்.

பிறருடன் நட்பு பாராட்டுதல், பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பீர்கள்.

விரத படையலில் கட்டாயம் இடம்பெறவேண்டிய உணவுகள் என்னென்ன?

ஒருத்தர் வாழக்கையில் சகல வசதிகளும் கிடைத்து மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றால் மாதம்தோறும் வருகின்ற அமாவாசை திதி தர்பணம் செய்ய வேண்டும்.

வருடத்தில் 2 அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒன்று தை அமாவாசை, இனியொன்று ஆடி ஆமாவாசை.

இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து, குல தெய்வ வழிபாடு இரண்டையும் செய்பவர்கள் வாழ்வில் நன்றாக இருப்பார்கள்.

அமாவாசை அன்று நாம் இறந்த நம் முன்னோர்களுக்கு அளிக்கப்படும் தர்ப்பணத்தை அவர்கள் பித்ரு உலகத்தில் சாப்பிடுவார்கள் என்று கருடபுராணத்தில் உள்ளது.

படையலில் நாம் யாரை நினைத்து தர்பணம் செய்கிறோமோ அவர்களுக்கு பிடித்த உணவுகளை நாம் வாழையிலையில் வைக்க வேண்டும்.

அந்தவகையில், வாழையிலையில் கட்டாயமாக அகத்துக்கீரை, வாழைக்காய் கறி, வடை பாயாசம் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும்.

முன்னோர்கள் படம் இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அவர்கள் பெயர்களை சொல்லவேண்டும்.

படையல் உள்ள வாழை இலையை சுற்றி முன்று முறை தண்ணீர் ஊற்றி, படையலை முன்னோர்களுக்கு படைக்க வேண்டும்.

இப்படி படைத்த பின்பு, வழிப்போக்கர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுதான் நாம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் இந்த தர்பணம் நிறைவு பெறும்.