குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சி தகவல்!

நாட்டில் 04 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) ஆரம்பமாகவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குடும்பங்களைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்திய விதிகளில் யாராவது இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், அவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏப்ரல் முதல் கொடுப்பனவு
இதேவேளை, ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இழப்பீடுகளின் பலன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரகக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.