செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளானது ஒரு குடும்பத்தின் நிம்மதி மற்றும் சந்தோஷத்தை அழித்து விடும் என்பார்கள்.
மனித பிறப்பு எடுக்கும் ஒவ்வொருவரும் தங்களது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களாவர்கள். கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ வாழ்வில் நிகழும்.
ஒருவர் தனது வாழ்நாளில் செய்வினையின் மூலம் பாதிக்கப்பட்டால், அது அவரது கர்மவினையை பொறுத்தே ஏற்படும்.
இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்த்து போராட முடியாமல் மறைமுகமாக அதாவது ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.
அவ்வாறு செய்யப்படும் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளில் இருந்து குடும்பத்தையும் வீட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்கு வீட்டிலேயே எளிய பரிகாரங்களை செய்யலாம்.
அந்தவகையில் எவ்வாறான பரிகாரம் செய்யலாம் எனவும் அதற்கு தேவையான பொருட்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- வெண்கடுகு – 250 கிராம்
- நாய்க்கடுகு – 250 கிராம்
- மருதாணி விதை – 250 கிராம்
- சாம்பிராணி – 250 கிராம்
- அருகம்புல் பொடி – 50 கிராம்
- வில்வ இலை பொடி – 50 கிராம்
- வேப்ப இலை பொடி – 50 கிராம்
என்ன செய்யலாம்?
இவை அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும்.
பின் சாம்பிராணியை பொடி செய்துக்கொண்டு, மற்றைய அனைத்து பொருட்களுடன் சேர்த்து ஒரு போத்தலில் அடைக்கவும்.
இந்த கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடலாம்.
குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தினமும் செய்தாலும் தவறில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் 48 நாட்களுக்குள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
கிடைக்கும் நன்மைகள்
- ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நீங்கும்.
- குடும்பத்தில் இன்பம் அதிகரிக்கும்.
- குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.
- வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
குறிப்பு: வாங்கிய அனைத்து பொருட்களும் சேர்த்து உருவாக்கப்பட்ட கலவையை காலில் மிதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவை அனைத்தும் தெய்வத்தன்மை பொருந்தியவை ஆகும்.