யாழில் போதைப்பாவனைக்கு அடிமையான இரு இளைஞர்கள் நேற்றைய தினம் (17.02.2024) உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ் – மல்லாகம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரியவருவது,
போதைப் பொருள் பவணைக்கு அடிமையான குறித்த இளைஞனுக்கு போதைப் பொருள் வாங்குவதற்கு தாயார் பணம் கொடுக்காததால் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவணை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் மற்றொரு சம்பவமாக,
யாழ் – தெல்லிப்பழை , கொல்லங்கலட்டி பகுதியில் தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பகுதியில் 26 வயதான இளைஞன் ஒருவர் தனது நண்பருடன் ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார். பின்னர் நண்பருக்கு தெரியாமல் சென்று ஐஸ் போதைப்பொருளும் உட்கொண்டுள்ளார்.
அதிகமான போதைப்பொருள் பாவனையால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் வீட்டுக்கு அருகிலேயே நடந்தது.
இளைஞன் தனது தாயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி , ஆபத்திலிருப்பதை தெரிவித்துள்ளார்.
தாயார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போது இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகளவில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளும் மரணங்களுமே அதிகளவில் பதிவாகின்றன.
போதைப்பாவணைக்கு அடிமையாகி இன்றைய இளைய சமுதாயமே அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.
எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும்.