கும்ப ராசியில் சூரியன் உடனான கூட்டணியால் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் 16ஆம் தேதி முதல் உதயமாகப்போகிறார். சனிபகவான் உதயமாவதால் சில ராசிக்காரர்கள் உச்சம் தொடப்போகிறார்கள். கும்ப ராசியில் உதயமாகும் சனிபகவானால் குரோதி தமிழ் புத்தாண்டில் யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
சனி பகவான்:
ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.
மேஷம்:
லாப வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனி பகவான் உதயமாகப்போகிறார். சனி பகவான் முழு பலன்களைத் தருவார். லாப சனி காலம் என்பதால் செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். வெளிநாட்டு வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்குவது நல்லது.
ரிஷபம்:
பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் உதயமாவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும்.
பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.
மிதுனம்:
பாக்ய ஸ்தானத்தில் சனி உதயமாவதால் யோகங்கள் அதிகரிக்கும். பணவருமானம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள்.
ஏனெனில் இது தர்ம சனி காலமாகும். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வெளி நாடு செல்ல நினைப்பவர்களுக்கு விசா கிடைக்கும்.
கன்னி:
சனி பகவான் ஆறாம் வீட்டில் உதயமாவதால் முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். உங்களை வாட்டி வதைத்த நோய்கள் தீரும். கவலைகள் காணாமல் போகும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும்.
இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும். ஆறாம் வீட்டு அதிபதி சனி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.
துலாம்:
சனிபகவான் துலாம் ராசியில் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார். பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். நல்லது அதிகம் நடக்கும். சனி உங்க ராசிக்கு ஐந்துக்கு உடையவர் என்பதால் வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
திருமண தடைகள் நீங்கும். சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.
தனுசு:
ஏழரை ஆண்டுகாலமாக சனி தனுசு ராசிக்காரர்களை ஆட்டி படைத்தது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் உதயமாவதால் இனி நன்மைகள் தேடி வரும் காலம். தனுசு ராசிக்காரர்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது.
கடனாக பணத்தை கொடுத்து விட்டு ஏமாந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்