அழ வேண்டாம் என்ற தங்கை! மகனின் உடலை கண்டு கதறி அழும் தாய்

செய்யாத குற்றத்திற்கு ஒரு குடும்பமே தண்டனை அனுபவிக்கும் வரலாறு யாழில் பதிவாகியுள்ளது.

சிறையில் சாந்தன் அனுபவித்த ஆயுள் தண்டனையை இனி தமது ஆயுள் முழுவதும் அந்த குடும்பம் அனுபவிக்கும் அவலநிலை உருவாகிவிட்டது.

கடைசி ஆசை
பெரும் குற்றங்களை இழைத்த தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை நிராசையாக போவது அரிதான விடயமாக இருக்கும் போது ஒரு குடும்பமே சாந்தனின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தில் வாழும் நிலை உருவாகிவிட்டது.

சாந்தன் தனது தாயை பார்க்க வேண்டும் என்று அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசாங்கம் என தன்னால் இயன்றவரை அனைவரிடமும் மன்றாடி தோற்றுவிட்டார். மனிதர்களை நம்பி ஏமாறுவது புதியவிடயமல்ல ஆனால் கோவிலே உறைவிடம் கடவுளே கதி என்று இருந்த சாந்தனின் தாயாரும் தோற்றுவிட்டார் என்றால் பாவப்பட்ட இந்த தமிழினம் யாரை நம்பி இன்னும் நீதிக்காக போராடுகின்றது?

”சாந்தன் விடுதலையான பின்னரும் 15 மாதங்கள் காத்திருக்கிறேன் மகன் இன்று வருவார் நாளை வருவார் என்று, ஆனால் மகன் வருவார் என்று எனக்கு இனியும் நம்பிக்கை இல்லை.

கோவிலடியில் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் சிரித்துக்கொண்டு என்னிடம் வந்து மகன் வரப்போகிறார் என கூறுகிறார்கள்.அப்படி என் மகனை நான் பார்த்துவிட்டால் அது கடவுள் செயல் என்றே சொல்வேன்.” என்று சாந்தனின் தாயார் கூறியிருந்தார்.