மகாசிவராத்திரி அன்று எண்ணற்ற சிவபக்தர்கள் மாகாதேவனின் ஆசியை பெறுவதற்காக விரதம் இருந்து ஆசியை பெற்று கொள்வார்கள்.
இந்த நாளில் சிவனை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தவை நடக்கும் என்பது ஐதீகம். பொதுவாக இந்த விரதத்தின் போது தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து தான் விரதத்தை முடிப்பார்கள்.
ஆனால் சைவமாக இருந்தாலும் அசைவமாக இந்தாலும் சிவராத்திரியின் போது சில உணவுகளை உண்ண கூடாது. அது எந்த உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாசிவராத்திரி
இந்த மகாசிவராத்திரி நாளில் சிவனையும் பார்வதியையும் வணங்கிய பின்பு தான் அந்த நாளை தொடங்க வேண்டும். இந்த நாளில் நீங்கள் அனைத்து வகையான பழங்களையும் உண்ணலாம்.
இந்த நாளில் ஹல்வா, பூரி ,அல்லது உப்பு கலந்த உணவை நீங்கள் எடுத்து கொள்ளலாம். இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் உளுந்து மாவு, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை மாவுடன் கல் உப்பு கலந்து செய்த உணவுகளை உண்ணலாம்.
ஆனால் என்னதான் இந்த உணவுகளை சாப்பட்டாலும் அன்றைய தினத்தில் சாப்பிட கூடாத உணவுகளும் இருக்கின்றன. சிவராத்திரி விரதம் அன்று கோதுமை அசிரி பருப்பு ஆகியவற்றால் செய்த உணவுகளை சாப்பிட கூடாது.
தவறுதலாக கூட நீங்கள் இந்த உணவை சாப்பிட்டால் உங்கள் விரதம் முடிவிற்கு வந்து விடும். சிவனின் ஆசியும் உங்களுக்கு கிடைக்காது.
மற்றும் இந்த நாளில் பூண்டு, வெங்காயம், இறைச்சி போன்ற அசைவ உணவுகளை உண்ணக்கூடாது. இந்த நாளில் மது அருந்த கூடாது. மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்ய கூடாது.