பொதுவாக கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான ஹோலி இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி வருகின்றது.
பஞ்சாங்கத்தின் படி, ஹோலி அன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது. மார்ச் 25ஆம் தகதி காலை 10.23 மணி முதல் மாலை 3.02 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹோலி பண்டிகையும் சந்திர கிரகணமும் சேர்ந்து நிகழ்கின்றது.
இந்த அரிய நிகழ்வினால் குறிப்பிட்ட சில ராசியினர் அதிர்ஷ்டத்தை அள்ளும் வாய்ப்பை பெறப்போகின்றார்கள். அந்த ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு சந்திர கிரகணம் பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.நினைத்த காரியங்கள் அனைத்தும் அதன் பின்னர் நிறைவேறும்.
எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும்ட வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மன நிம்மதியும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு சந்திர கிரகணம் சாதகமாக பலன்களை கொடுக்கவுள்ளது. வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கு உகந்த காலப்பகுதியாக இது காணப்படும்.
எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். நினைத்த இலக்கை இந்த காலப்பகுதியில் அடைந்தே தீருவீர்கள்.
கன்னி
கன்னி ராசியினருக்கு சந்திரகிரகணம் பல சாதக பலன்களை கொடுக்கவுள்ளது. சந்திரகிரகணத்துக்கு பின்னர் அனைத்தும் வெற்றி பாதையில் செல்வதை உணர்வீர்கள்.
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு மற்றும் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பும் அதிகமாகவுள்ளது. இந்த ராசியினரை அதிர்ஷ்டம் தேடி வரும் என்றே சொல்லாம்.