இந்த ஆண்டிற்கான முதல் முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இதனால் 4 நிமிடங்கள் மற்றும் 9 நிமிடங்களுக்கு சில பகுதிகளில் இருளில் மூழ்கியிருக்கும்.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் தெரியும். கடந்த ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தை விட இந்த ஆண்டு நிகழும் கிரகணத்தின் நேரம் அதிகமாக இருக்கிறது.
3 நாடுகளில் மட்டுமே இந்த கிரகணத்தை காண முடியும் என்பதால் இது எத்தனை அரியது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது. சூரிய கிரகணத்தை காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் அருகே லட்சக்கணக்கானோர் கூடுவர் என தெரிகிறது.
இது போன்ற ஒரு கிரகணம் பசிபிக் பகுதியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இந்த கிரகணத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.37 மணிக்கும் அமெரிக்க நேரப்படி மதியம் 2.07 மணிக்கும், பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகும்.
சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும். இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும்.
இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.