இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு நபரிடம் கடுமையாக நடந்து கொண்ட நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தெரு உணவு விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1,900 ரூபாய் என சந்தேகநபர் குறிப்பிடும் நிலையில், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கடை உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.இதனை சுற்றுலாப் பயணி தனது கமராவில் பதிவு செய்த நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியதை தொடர்ந்து சந்தேகநபரான தெரு உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.