பொதுவாகவே வீட்டை கட்டும் போது வாஸ்து படி இருந்தால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக வாஸ்து வீட்டில் வாழ்வோரின் மனநிலை மற்றும் எதிர்கால வாழ்க்கையில் பாரிய தாக்கம் செலுத்துகின்றது.
அந்தவகையில் வாஸ்து முறைமைகளை பின்பற்றி வீட்டை கட்டாதபோது ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து முறைமைகள்
புதிதாக வீடு கட்டும் போது வாஸ்து படி, ஒரு குறுக்கு வழி, சந்திப்பு மற்றும் சதுரத்தில் கட்டப்படும் வீடு வாஸ்து குறைபாட்டை கொண்டுள்ளதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு கட்டப்படுவதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிப்படுடன் வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை ஏற்படும்.
வீடு கட்டும்போது பழைய மரம், செங்கற்கள், கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்துவதும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் என்பது ஐதீகம்.
வடகிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகள் அமைக்கப்படடால் வீட்டில் பணப்பிரச்சினைகள் மற்றும் நோய்கள் என்பன அதிகரிக்கும்.
மேலும் வீட்டின் நடுப்பகுதி எப்போதும் காலியாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் நுழைய ஒரே ஒரு கதவு மாத்திரமே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
வீட்டிற்குள் நுழைவதற்கு தெற்கு திசையில் தவறுதலாகக் கூட கதவை வைத்துவிட கூடாது இது பாரிய நிதி இழப்பு மற்றும் துர்திஷ்டத்தை ஏற்படுத்தும். வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் தான் பிரதான வாசலுக்கும் சிறந்தது.
வியாழ பகவான் வீட்டின் வடகிழக்கு திசையில் தான் இருப்பதாக வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. எனவே இந்த திசையில் பூஜை அறையை வைப்பது மிகவும் சிறந்தது.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சமையலறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இவற்றை பின்பற்றினால் வீட்டின் செல்வம் கொழிக்கும் என்பதுடன் மன அமைதியும் நிலவும்.