ஏழரை சனி காலத்திலும் சிறப்பாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

இந்து சாஸ்திரத்தின்படி சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

ஜோதிடத்தின்படி, சனி பகவான் யாருக்கும் தீமை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கர்மா தவறாக இருக்கும்போது அவற்றின் எதிர்மறை விளைவுகள் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

சனிபகவான் கர்மாவுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதிபதியாக கருதப்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளை அவருக்கு மிகவும் பிடிக்குமாம். அப்படி சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்

துலா ராசியினர் மீது சனிபகவானுக்கு எப்போதும் தனி பிரியம் இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்கள் சனியின் கோப பார்வைக்கு ஒருபோதும் பயப்பட தேவையில்லை. சனி பெயர்ச்சி காலங்களிலும், ஏழரை சனி காலங்களிலும் கூட இந்த ராசியினருக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

தனுசு
தனுசு ராசியினர் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.சனி பகவானும் குரு பகவானும் நட்பு கிரகங்கள் என்பதால் தனுசு ராசியினருக்கு இருவரின் ஆசீர்வாதமும் முமுமையாக கிடைக்கின்றது. சனியின் அருளால் இவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாக இருப்பார்கள்.

மகரம்

மகர ராசியினர் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். மகர ராசிக்காரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சனி பகவானின் ஆசீர்வாதம் முமுமையாக கிடைக்கின்றது. இந்த ராசியினர் கடின உழைப்புக்கு ஏற்ற பலனை நிச்சயம் பெறுவார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் சனியின் அருளால் அவை அனைத்தும் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசியினரக்கு சனி பகவானே அதிபதியாக இருக்கின்றார். சனி பகவானின் ஆசீர்வாதத்தால் இவர்கள் வாழ்வில் ஒருபோதும் பணப்பற்றாக்குறை ஏற்படாது. இந்த ராசியினர் சாதாரணமாக முயற்சி செய்தாலும் அதிக பலன்களை பெறுவார்கள். சனி பகவானின் அருளால் திடீர் பண வரவுகள் கிடைக்கும். ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சி காலங்களிலும் சனி பகவான் இவர்கள் மீது கருணை பார்வை செலுத்துகின்றார்.