யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்ன்னான்டோவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் பலாலி வீதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் தொகுதி அமைப்பாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தற்போதுள்ள அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்ததோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாழ் மாவட்டம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.