சனியின் பிற்போக்கு நிலை! 63 நாட்களுக்கு ராஜயோகத்தினை அடையும் 3 ராசிகள்

சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பின்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், இதனால் ராஜ யோகத்தினை அடையும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் சனி கிரகத்தின் நிலையும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சனி பகவான் தற்போது கும்பத்தில் பிற்போக்கு நிலையில் உள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின்பு சனி தனது மூலத்திரிகோண ராசியான கும்பத்தில் தலைகீழாக சஞ்சரிப்பதால், ராஜயோகம் உருவாகிறது.

இதனால் வரும் நவம்பர் 15, 2024 வரை கும்ப ராசியில் சனி பிற்போக்கான நிலையிலேயே இருப்பதுடன் சில ராசியினருக்கு சுபபலன்களும் கிடைக்கும்.

இதனால் அடுத்த 63 நாட்களுக்கு பேரதிர்ஷ்டத்தில் சில ராசியினர் காணப்படுவார்கள். அவர்களின் தொகுப்பு இதோ…

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கும், சனிக்கும் இடையே நட்புணர்வு இருப்பதால் இந்த பிற்போக்கு நிலையானது ரிஷப ராசியினருக்கு சாதகமாக இருக்கும்.

முடியாமல் இருக்கும் வேலைகள் இந்த காலக்கட்டத்தில் முடிவடைவதுடன், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கும்.

கும்பம்
சனியின் பிற்போக்கு நிலையினால் கும்ப ராசியினர், நிதி பிரச்சனையிலிருந்து விடுபடுவதுடன், அதிர்ஷ்டவசமாக சில வேலைகள் முடியவும், புதிய வருமானத்தின் வழிகளும் அமையும்.

தொழிலில் புதிய சாதனைகளை பெறும் நீங்கள் கடின உழைப்பால் சுகமான சூழ்நிலையை அடைவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் மற்றும் முன்னேற்றம் அடைவீர்கள்.

விருச்சிகம்
சனியின் பிற்போக்கு நிலையினால், விருச்சிக ராசியினரின் நிதிநிலை மற்றும் உடல், மன ரீதியான பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதுடன் நல்ல செய்தியும் கிடைக்கும்.

வேலையில் இருப்பவர்கள் நல்ல லாபம் கிடைப்பதுடன், பழைய முதலீடுகளிலிருந்து நல்ல வருமானமும் கிடைக்கும். நிதிநிலையும் வலுப்படுத்தும்.