ரேஷன் பொருள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்தையும் அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டு வழங்கும் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன. சுமார் 7 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்த பலருக்கு இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விநியோகம் செய்யப்பட்டு விடும் என்று முன்பு கூறப்பட்டிருந்தாலும் ஆனால் அந்தப் பணிகள் நிறைவு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் ரேஷன் கார்டு அடிப்படையில் அவர்களுக்கான பொருட்கள் மாதம்தோறும் அனுப்பப்படும் என்றும், புதிதாக கார்டு பெற்றவர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இப்படி ரேஷன் கார்டு வழங்கப்படுவதில் தாமதம் , ரேஷன் பொருள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்தையும் அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய