இந்தியா வரும் வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
இந்தியா, வங்கதேசம் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் போட்டி, வரும் 19ஆம் தேதி சென்னையில் துவங்கும். 2ஆவது போட்டி 27ஆம் தேதி கான்பூரில் துவங்கும்.
இந்நிலையில், வங்கதேச டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியை, நேற்று பிசிசிஐ அறிவித்தது. அதில் இளம் வீரர்கள் மற்றும் சீனியர்கள் கலவையாக இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் இருந்து ரஹானே, புஜாரா நீக்கப்பட்டு மாற்றாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், சர்பரஸ் கான், ஆகாஷ் தீப், யாஷ் தயாள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு டிசம்பரில், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு, புது வருசத்தை கொண்டாட வீடு திரும்பிய ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிய நிலையில், அதன்பிறகு முதல் முறையாக இந்திய அணிக்கு திரும்ப உள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ஜஸ்பரீத் பும்ரா, ரிஷப் பந்த, கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் ஆகிய நான்கு பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தொடர் ஓய்வில் இருந்த பும்ரா சர்பரைஸாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் பும்ரா, ரிஷப் பந்த், ராகுல், கில் போன்றவர்கள் இருக்கும் நிலையில், துணைக் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ அறிவிக்கப்படாமல், பெரிய ட்விஸ்ட் நீடிக்கிறது.
இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, பும்ராவுக்குதான் துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வங்கதேச டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள போதும், துணைக் கேப்டன் யார் என்பதை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், வங்கதேச டெஸ்ட் தொடரில் தன்னை துணைக் கேப்டனாக அறிவிக்காமல், துணைக் கேப்டன் இடத்தை காலியாக வைத்திருப்பது ஏன், தனக்கு அந்த பதவியை கொடுக்க வேண்டும் என பிசிசிஐக்கு பும்ரா மெய்ல் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மீது பும்ரா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.