இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி,உடனடி பளபளப்பைப் பெறுங்கள்

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு பெரும்பாலும் பெண்கள் மேக்கப் பொருட்களை தான் நாடி செல்கின்றனர்.

அதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களைக் கொண்டும் முகத்தில் உடனடி பிரகாசத்தை பெற முடியும். அது எப்படி என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

உளுத்தம் பருப்பு ஸ்க்ரப்
தேவையானவை
1 கிண்ணம் உளுத்தம் பருப்பு
1 கிண்ணம் வெள்ளரி சாறு
2 ஸ்பூன் தயிர்

செய்முறை
முதலில் உளுத்தம் பருப்பை அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும்.
பின் அதில் வெள்ளரி சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
அதன் பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, சுத்தமான நீரில் முகத்தை கழுவவும்.
இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் செய்து வரவும்.

அரிசி மாவு ஸ்க்ரப்
தேவையானவை

1 கிண்ணம் அரிசி மாவு
பாதி தேங்காய்

செய்முறை
முதலில் அரிசி மாவை அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும்.
பின் தேங்காயை நசுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதன் பிறகு முகத்தை கழுவவும்.
இதை வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் தொடர்ந்து செய்து வரலாம்.

குறிப்பு:-
தினமும் சருமத்தை சுத்தம் செய்து, மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.
இரவில் தூங்கும் முன் கூட சருமத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள், இதனால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் வராது.
சரியான மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுங்கள்.