சீனாவில் மூளையை பாதிக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மூளை மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு புதிய வகை வைரஸ் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Wetland virus (WELV) வெட்லேண்ட் என்ற வைரஸ் முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வைரஸினால் மங்கோலியாவில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் அந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டுள்ளார்.

வெட்லேண்ட் வைரஸ்
காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஐந்து நாட்களுக்கு காணப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் சற்று சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 14,600 உயிரினங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒட்டுண்ணிகளில் (WELV) கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் மரபணுப் பொருளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் மங்கோலியா பிராந்தியத்தில் 640 வன அதிகாரிகளின் இரத்த மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். இதில் 12 பேருக்கு இந்த வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களிடம் காய்ச்சல், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்பட்டள்ளன.

இந்த நோயாளிகளில் ஒருவர் மூளை மற்றும் முதுகெலும்பு திரவத்தில் அதிக வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை காரணமாக கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இருப்பினும், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர்.

ஆனால் எலிகள் மீதான ஆய்வக சோதனைகள் WELV உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளது.

குறிப்பாக மூளை மற்றும் நரம்பியல் சுகாதார பிரச்சினைகள் பொதுவானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு சமீபத்தில் தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளது.

(Wetland) வெட்லேண்ட் வைரஸ் என்பது கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் குழுவைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். இது ஒட்டுண்ணிகள் மூலம் பரவுகிறது. இதன் RNA ஏற்கனவே பன்றிகள், ஆடுகள் மற்றும் குதிரைகளில் கண்டறியப்பட்டுள்ளது.