மக்களை ஏமாற்றுகிறதா தமிழரசுக்கட்சி: அரியநேத்திரனை சந்தித்த மாவை – சஜித்தின் மேடையில் சுமந்திரன்

சென்னை: நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இங்கே மீதமுள்ள பகுதிகளை 5.38 கோடியில் முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது.

மப்பேடு மற்றும் நெடுங்குன்றத்தில் ஏற்கனவே உள்ள இருவழிச் சாலைகளை ஆறுவழிப் பாதையாக விரிவுபடுத்தும் திட்டம் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சாலை அமைக்கப்பட்டால், வேளச்சேரி மற்றும் அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசல் மிகுந்த ஜிஎஸ்டி சாலையை கடந்து பெருங்களத்தூரை 20-30 நிமிடங்களில் அடையலாம்.

எம்எஸ்ஐ சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பை பெருங்களத்தூருடன் இணைக்கும் 8.8 கி.மீ., திட்டம், 10 ஆண்டு கால தாமதத்திற்கு பின், கடந்த ஜூலை மாதம் புத்துயிர் பெற்றது. ஆனால் மீண்டும், நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்கள் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூரில் வன கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தில் நீடித்து வரும் தாமதம் குறித்து தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரக்தியை வெளிப்படுத்தி வந்தனர். முக்கியமாக எட்டு மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு ஒப்பந்ததாரர்களும் ஒப்பந்தம் செய்யப்படாத காரணங்களால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளாமல் மாநில நெடுஞ்சாலை துறை காலம் தாழ்த்தி வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில்… விடுபட்ட மற்ற இணைப்புகளில் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மப்பேடு, நெடுங்குன்றம் வழியாக செல்லும் சாலையை ஓராண்டுக்குள் அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட பாதைகள் தவிர, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், எதிரெதிர் போக்குவரத்தைப் பிரிப்பதற்காக, மத்திய மீடியனில் விபத்துத் தடுப்புகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன.