5 நாட்களில் லப்பர் பந்து படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

லப்பர் பந்து
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். அதே போல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் அட்டகத்தி தினேஷ்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா, டி எஸ் கே, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல்
இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது.