இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில் புதிய அரசாங்கத்தில் இதற்கான தீர்வு கிட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அனுர (Anura Kumara Dissanayake) பதவியேற்றதிலிருந்து அதிரடி மாற்றங்கள் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது கடற்றொழில் விடயத்திலும் மாற்றம் வருமென இலங்கை கடற்றொழிலாளர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கடற்றொழில் விடயத்தில் இலங்கையுடன் முரண்பாட்டிலிருக்கும் இந்தியா புதிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
வைகோ வலியுறுத்து
அந்தவகையில், தமிழக கடற்றொழிலாகளின் உரிமையை நிலைநாட்ட இலங்கையின் புதிய அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ (Vaiko) வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடற்றொழிலாளகள் இந்திய கடல் எல்லையில் கடற் தொழிலில் ஈடுபடுகிறபோது, இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடா் நிகழ்வுகளாகிவிட்டன.
பூம்புகாரைச் சோ்ந்த 37 கடற்றொழிலாளர்களை செப்டம்பா் 21-இல் கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை, அவா்களது மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கடற்றொழிலாளர்களுக்கு அதிக அளவில் அபராதமும் விதித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையைச் சோ்ந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுப்பட்டதாக கூறி இலங்கைக் கடற்படை கைது செய்வதும், கடற்றொழிலாளர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்குவதும் இலங்கை மீன்பிடி தடைச் சட்டத்தின்படி கடுமையாக அபராதம் விதிப்பதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா அழுத்தம்
இதேவேளை, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்தியாவின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா (Sudha Ramakrishnan) வேண்டுக்கோள் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனது இறையாண்மையுள்ள ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி இலங்கை சிறையில் வாடும் அனைத்து இந்திய மீனவர்களையும் நல்லெண்ணம் மற்றும் அன்பின் அடையாளமாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்குவதற்கான தனது உறுதியான நோக்கத்திற்கு இத்தகைய சைகை நிறைய வலு சேர்க்கும் என்றார்.கடற்தொழிலாகளை விடுவிக்கவும், அவர்களின் அனைத்து படகுகளையும் நல்ல பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.
மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த 37 கடற்தொழிலாளர்களை விடுவிப்பதன் மூலம் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்க முடியும், மேலும் 80 கடற்தொழிலாளர்கள் மற்றும் 173 மீன்பிடி படகுகள் இலங்கையின் காவலில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.