ஐக்கிய கட்சியின் புதிய செயலாளராக முன்னாள் நீதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருமான தலதா அத்துகொரள நியமிக்கப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் சுப நேரத்தில் தனதுசெயலாளர் பதவியினை பொறுப்பேற்றார்.
குறித்தநிகழ்வில், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடமான ஸ்ரீ கோத்தாவில் இடம் பெற்ற புதிய செயலாளர் பதவியேற்பு நிகழ்வில் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்த்தன முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சாகல ரட்ணாயக்க,வஜிர அபயவர்த்தன உட்பட பலர் கலந்து கொண்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.