மேற்கு ஈரானில் சுமார் 10 மாகாணங்களில் நச்சுத் தன்மை கொண்ட காளான்களை உட்கொண்ட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 800 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளத
இவர்களுள் 200 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவருக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை காளான்களால் ஏற்படும் நச்சுத் தன்மைக்கு பயனுறுதிப்பாடுள்ள மருந்து ஏதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.