பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண்மணி ஒருவர் சாதனைகுரிய விருது ஒன்றை பெற்றுள்ளார்.

பிரித்தானிய கவுன்சிலின் முதலாவது குளோபல் அலுமினி விருதுகளில் தொழில்முறை சாதனைக்கான விருதினை ஆஷா டி வொஸ் (Asha de Vos) வென்றுள்ளார். இலங்கை கடல் உயிரியல் நிபுணராக ஆஷா டி வொஸ் செயற்பட்டு வருகிறார்.

21 பிராந்தியங்களை சேர்ந்த 62 போட்டியாளர்கள் விருதுக்கு பிரேரிக்கப்பட்ட நிலையில், பிரித்தானிய அலுமினி விருதுகளுக்கான மூன்று சிறந்த வெற்றியாளர்களில் ஒருவராக ஆஷா தெரிவாகியுள்ளார்.

வெற்றியாளர்கள் பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்களாகும். இவர்கள், மூன்று நாடுகளையும் நான்கு பிரித்தானியாவின் உயர் கல்வி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

ஆஷா ஒரு கடல் உயிரியலாளர் ஆவார். உலகின் பெருங்கடல்கள் பாதுகாக்கப்படுவது மற்றும் வட இந்திய பெருங்கடலில் நீல திமிங்கிலம் ஆராய்ச்சியில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளார்.

அவர் இலங்கையின் முதலாவது கடல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான Oceanswellஇன் நிறுவனர் ஆவார்.

உலகின் கடற்பாதைகளின் பாதைகளை மாற்றுவதற்கும், மக்களை காப்பாற்றுவதற்கும் மக்களுக்கு ஆற்றல்களை ஊக்குவிப்பதற்கும் ஆஷா டி வொஸ் உதவுகின்றார்.