உலக சனத்தொகையில் நாள் ஒன்றுக்கு ஒரு பில்லியன் சிறுவர்கள் உணவின்றி பட்டினியால் வாடுவதுடன், நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழப்பதாக பன்னாட்டு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளை பன்னாட்டளவில் 2754 பெரும் செல்வந்தர்கள் உள்ளனர். அவர்கள் உலகின் 9.2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பணத்தில், 9 கோடி, இருபது இலட்சம் அமெரிக்க டொலர்களை உரிமையாக வைத்துள்ளனர். இவர்களின் சொத்து 2016 ஆம் ஆண்டை விட 24% அதிகரித்துள்ளது.
இந்த 2754 பேரில் 680 பேர் அமெரிக்கவைச் சேர்ந்தவர்கள். 90 பேர் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 730 கோடி உலக சனத்தொகையில் 1% செல்வந்தர்களிடம் பன்னாட்டுப் பணம் 82% நிரம்பியுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.