நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு அவரது கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தமிழகம் – நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற விவசாயியொருவரே இந்த மனுவை கையளித்துள்ளார்.
அந்த மனுவில், 8 மாதங்களுக்கு முன் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்குச் சென்ற தன் மனைவி இன்று வரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மனைவியின் பெயரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் உடனே தன் மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் பல பெண்கள் உள்ளனர். அதில் தனது மனைவியும் உள்ளார். எனவே அவரை மீட்டு தருமாறு ராமசாமி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.