விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டி பணம் பறிப்பு என்பன தவறு எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு குலமன்னை, அப்துல்லா மற்றும் மாம்பழம் என மூவருக்கும் ஒத்திவைக்கப்பட்ட தடுப்பு தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யோகேஸ், கவிதாஸ், குமார் மற்றும் சிவலோகநாதன் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு இழப்பீடுகளும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.