சீனாவில் தொடங்கவிருக்கும் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை பலியிட்டு கொண்டாட சீனர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர்.சீனாவில் வரும் 21 ஆம் திகதி யூலின் நகரில் நாய்கறி திருவிழா நடைபெற உள்ளது. வருடா வருடம் கொண்டாடப்படும் இத்திருவிழாவிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த திருவிழாவில் சுமார் 10,000 நாய்கள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. அத்தோடு இல்லாமல் சில நாய்கள் உயிருடன் தீயில் வாட்டப்படுகின்றன. சீனர்களை பொறுத்தவரை நாய் இறைச்சி உடலுக்கு குளிர்ச்சி தரும் என நம்புகின்றனர்.இத்திருவிழா சீனாவில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.