கனடாவின் பொருளாதாரம் பிப்ரவரியில் 15,000 மேலதிக வேலைவாய்ப்புக்களை சேர்த்துள்ளது. இதனால் வேலையின்மை விகிதம் 6.6சதவிகிதம் கீழ் நோக்கி தள்ளப்படடுள்ளதாக கனடா புள்ளி விபரவியல் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
105,000ற்கும் மேற்பட்ட முழு நேர வேலை வாய்ப்பு—2006லிருந்து காணப்படும் சிறந்த மாதாந்த செயல்திறன் என Bank of Montreal குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட 90,000 பகுதி-நேர வேலைகளின் சரிவையும் இது ஈடுகட்டுகின்றாக அமைகின்றதென கூறப்படுகின்றது.
வேலைகளின் ஏற்றம் வேலை வாய்ப்பின்மை அளவை 6.6சதவிகிதம் கீழ் தள்ளியுள்ளமை ஒரு தசாப்தமாக இருந்து வந்த குறைந்த அளவை சமப்படுத்துவதாக அறியப்படுகின்றது.
புதிய வேலை உருவாக்கம் வேலையின்மை விகிதத்தை கீழ் தள்ளியதாலும் ஆனால் பங்களிப்பு விகிதம் ஒரு குறி சரிவடைந்ததாலும் ஏற்பட்டதென BMO பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.