இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் எம்எல்ஏ தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாகவும், இதற்கு தன் கணவரும் உடந்தை என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் அல்காபூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் நிஜாம் உதின் சவுத்திரி(45).
இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்தவரான இவர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், தன்னுடைய வீட்டில் வைத்து எம்எல்ஏ இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு முறை சுற்றுலா வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எம்ஏல்ஏவின் சுற்றுலா வீட்டிற்கு தன்னுடைய கணவர் அழைத்துச் சென்றதாகவும், சுற்றுலா வீட்டில் வைத்தும் என்னை சவுத்ரி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதற்கு எல்லாம் தன்னுடைய கணவரும் உடந்தை, இது குறித்து நான் புகார் அளித்ததால், 5 லட்சம் ரூபாய் தருகிறேன் வழக்கை திரும்ப பெற்றுக் கொள் என்று எம்எல்ஏ கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் எனக்கு நீதி வேண்டும். நீதி எனக்கு மறுக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கண்ணீர் மல்க உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
ஆனால் எம்எல்ஏவோ, எனது குழந்தைகளை அப்பெண்ணின் கணவர்தான் டியூசனுக்கு அழைத்துச் செல்வார். அதன்மூலம் தான் அவரை எனக்குத் தெரியும்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. அப்போதில் இருந்தே இருவருக்கும் சண்டை தான்,
இதன் காரணமாக அப்பெண்ணின் கணவர் என் வீட்டில் சில நாட்கள் தங்கினார்.
இதனால் அவர் தன் கணவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி பொய் கூறுகிறார். இது ஒரு அரசியல் சதி எனவும் கூறியுள்ளார்.