பிரிட்டனைச் சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது. அதனால் அவர் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டதால் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இரண்டு பெரிய பிளாஸ்டிக் டியூப்கள் அவரது இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் மூலம் இயக்கப்படும்.
இது அடங்கிய கருவியை ஹூசைன் தனது முதுகில் மாட்டிக் கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் அந்த பையை எடுத்து கொண்டு தான் செல்வார். அவர் கூறுகையில், ‘என் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட உதவிய ஹரிபீல்ட் மருத்துவமனைக்கு நன்றி. நான் உயிருடன் வாழ ஒரு தீர்வை உருவாக்கியது மிக சிறப்பானதாகும்’ என கூறியுள்ளார்.