ஐதராபாத் அணி சொந்த மண்ணில் மூன்று வெற்றியை பெற்று இருந்தது. இன்றைய ஆட்டத்திலும் சொந்த மண்ணில் ஆடுவதால் டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணியில் கேப்டன் வார்னர், யுவராஜ்சிங், தவான், ஹென்ரிக்ஸ், ரஷீத்கான், புவனேஷ்வர் குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு இன்றைய ஆட்டத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி டேர்டெவில்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி புனேயை 97 ரன் வித்தியாசத்திலும், பஞ்சாப்பை 51 ரன் வித்தியாசத்திலும் வென்றது. பெங்களூர் அணியிடம் 15 ரன்னிலும், கொல்கத்தாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.
டெல்லி அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 2 ஆட்டத்தில் போராடியே தோற்று இருந்தது. இதனால் ஐதராபாத்துக்கு எல்லா வகையிலும் டெல்லி அணி சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியில் ரிஷப் பண்ட், பிராத் வெயிட், சாம் பில்லிங்ஸ், சஞ்சு சாம்சன், கிறிஸ் மோரிஸ், கும்மின்ஸ், கேப்டன் ஜாகீர்கான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் மோதி இருந்த ஆட்டத்தில் ஐதராபாத் 5 போட்டியிலும், டெல்லி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.