தொண்டமனாறு வல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்து பெண் ஒருவர் வளர்த்து வரும் கோழிகளை பிடிக்க முற்பட்ட நபர், ஊர்ப்பொதுமக்களை கண்டதும் மோட்டார் சைக்கிளினை வீதியில் கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் பொதுமக்களினால் மீட்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கோழிகளை பிடிக்க ஒருவர் முற்பட்டுள்ளார். இதன் போது விழித்துக் கொண்ட அப் பகுதி இளஞர்கள் குறித்த நபரை கையும் மெய்யுமாக பிடிக்க முற்பட்டுள்ளனர்.
வந்த திருடன் பிடிக்க முற்பட்ட இளஞர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளினை கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.
பின்னர் இது தொடர்பில் இரவு ரோந்து கடமையில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு ஊர் இளஞர்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளினை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர். கைபெற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரினுடையது என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் நெல்லிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.